பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க இனி ஜாதியைக் குறிப்பிடத் தேவையில்லை!

English excerpt:
Tamil Nadu government issues a government order (GO) stating that it is not mandatory to mention caste and religion in admission forms for colleges and schools. Those who choose NOT to mention caste and/or religion can do so at will.


அரசாணை (நிலை) 205-இல், ‘பார்வையில் காணும் (அரசாணை 1210, நாள். 02.07.1973) அரசாணையின்படி – இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரேனும் விரும்பினால், அவ்வாறே செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இம்முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று அறியப்படுவதால், அரசாணையில் தெரிவித்துள்ளதை இனிவரும் காலங்களிலும் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும் தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி, சமயக் குறிப்பு தேவையில்லை எனவும் ஆணையிடப்படுகிறது’ என்று தெரிவித்தது.

No comments: